நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள் ..! உங்களுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உங்களின் நிதி நிலையை நீங்கள் தெரிந்து கொண்டு அதை நல்ல முறையில் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். நிதிப்பிரச்சனை என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டும் இல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் முதல் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் உண்டான ஒரு பிரச்சனை தான். இது போன்ற நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது. கடவுச் சொற்க ள் : நிதி தொடர்பான அனைத்து செயல்களும் மின்னணு மயமாக மாற்றப்பட்டு வருவதால் உங்களின் இணைய வங்கி, மின்னஞ்சல், ஏடிஎம், மொபைல் பாங்கிங், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட கணக்குகளின் பயனாளர்கள் தங்களின் பெயர் மற்றும் கடவுச் சொற்களை நீங்கள் மட்டுமே தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தாளில் எழுதி பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். உங்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை உங்களின் வாழ்க்கைத்துணை அல்லது வாரிசுகளுக்கு இதை தெரியப்படுத்துங்க...