தாய் கார்டியனாக இருக்கலாமா? மாணிக்கம் செட்டியாரின் மகன்கள் பேரன்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்கள் ஏகப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள். மிக அதிகமாக சொத்துக்கள் இருக்கின்றன. 1976-ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஒரு பேரன் இந்த பாகப் பிரிவினை வழக்கைப் போடுகிறான். 1977-ல் வாதி (ஒரு பேரன்) மைனராக இருக்கும்போதே அவனிடம் விடுதலை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். அவன் அவ்வளவு உஷாராவன் இல்லை. அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இருந்து அந்த விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் மற்றவர்கள் சேர்ந்து 1977-ல் ஒரு பாகப் பிரிவினை பத்திரம் எழுதிக் கொண்டு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். அந்த மைனர் பேரன், மேஜர் வயதை அடைந்தவுடன் பாக வழக்குப் போடுகிறான். அதில், அவனை ஏமாற்றி அந்த விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கப் பட்டுள்ளது என்றும், அவன் மைனராக இருந்தபோது, அவனின் தாயார் அவனுக்காக கார்டியனாக அதில் கையெழுத்து செய்துள்ளார் என்றும், அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இயங்க முடியாது (She is neither de facto guardian nor a natural ...