பூமியில் வாழும் எல்லா உயிர்களும் உற்சாகமாகவே வாழ்கிறது. ஆனால் மனிதராகிய நம் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும், அவநம்பிக்கையும் ஊற்று எடுக்கின்றன. வாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..? செயலில் தோல்வி அடைந்தால், அதற்காக ஏன் எரிச்சல் கொள்ள வேண்டும்.? நாம் சந்தித்தது தோல்வியா?. இருந்திட்டு போகுது..., தோல்வியை நினைத்து. நினைத்து உற்சாகம் இன்றி வேதனையும் எரிச்சலுமாக இருந்தால் என்ன பலன் ? நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளவே இந்த மனநிலை வழி வகுக்கும். நம்மிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர் சுட்டிக்காட்டும் போது கோபப்படாமல் அதனை திருத்தி கொள்ளவதே மகிழ்ச்சியாக இருக்க வழி வகுக்கும். நம் தோல்விகளை, நம் குறைகளை ஒப்புக்கொள்ள ஒருபோதும் வெட்கப்படக் கூடாது. உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகும். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பார்த்தால். அது நின்று விடாது. விரலைச் சுற்றி வரும்.எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும். எத்தனை தடைகள் போட்...