Skip to main content

நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள்..!


நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள்..!



உங்களுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உங்களின் நிதி நிலையை நீங்கள் தெரிந்து கொண்டு அதை நல்ல முறையில் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிதிப்பிரச்சனை என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டும் இல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் முதல் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் உண்டான ஒரு பிரச்சனை தான்.

இது போன்ற நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

கடவுச் சொற்கள் :


நிதி தொடர்பான அனைத்து செயல்களும் மின்னணு மயமாக மாற்றப்பட்டு வருவதால் உங்களின் இணைய வங்கி, மின்னஞ்சல், ஏடிஎம், மொபைல் பாங்கிங், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட கணக்குகளின் பயனாளர்கள் தங்களின் பெயர் மற்றும் கடவுச் சொற்களை நீங்கள் மட்டுமே தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தாளில் எழுதி பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். உங்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை உங்களின் வாழ்க்கைத்துணை அல்லது வாரிசுகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள்.

வாரிசு நியமித்தல் :


வாரிசு நியமித்தல் என்பது அவசியமில்லாத ஒன்று எனக் கருதி பெரும்பாலும் தவிர்கின்றனர். இருப்பினும், 

வங்கி கணக்கு , 

காப்பீட்டு , 

பங்கு வர்த்தகத்தில் முதலீடு 

அனைத்து நிதி தொடர்பான முதலீடுகளுக்கும்

அவற்றின் பயன்கள் சேர வேண்டியவர்களுக்கு எளிமையாகச் சென்றடைய உதவியாக இருக்கும்.

வாரிசு நியமனம் என்பது முதலீடுகள் வாரிசுகளுக்குச் சென்று சேர ஒரு அறங்காவலராக இருப்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவு ஏற்படுதல் மற்றும் உணர்வுப் பூர்வமான அதிர்ச்சி ஆகியவற்றைக் குறைத்திடவும் உதவும்.

 

காப்பீடு

ஆண்டு வருமானம் போன்று குறைந்தது 10 மடங்குக்கு எல்ஐசி யில் பாலிசி எடுத்திருப்பது அவசியம்.


கடன்தாரர்,

வரி ஆணையம்,

போன்றவைகள் மட்டுமல்ல

நீதிமன்றமேகூட  தங்களுடைய எல்ஐசி பாலிசியின் பணப் பயனை அட்டாச்மென்ட்  செய்ய முடியாதவாறு (எடுத்துக்கொள்ளாதவாறு) தாங்கள் வாங்கும் எல்ஐசி பாலிசியை MWP Act இன் கீழ் வாங்கவும்.

மருத்துவக் காப்பீடு


அதிகரித்துவரும் நோய் பாதிப்புகளான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்களிலிருந்து மீண்டுவர, நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது மட்டுமல்லாமல் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பு தரும் திட்டங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்


ரிட்டையர்மென்ட்
இந்தியர்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. 60வயதுக்குபின்பு இன்னொரு 30 வருடங்களாவது வாழ்ந்தே ஆகவேண்டும். ரிட்டையர்மென்ட்டுகாலத்தில் நிலையான உத்தரவாதமான வருமானத்திற்கு இளம்வயதிலேயே திட்டமிடுங்கள்.
நிலையான மற்றும் அரசு உத்திரவாதத்துடன் கூடிய பென்சன் திட்டங்கள் எல்ஐசியில் மட்டும் உள்ளது.

ஆவணங்களைத் திட்டமிடுங்கள் :

உயில்


முக்கிய ஆவணங்களை நெறிப்படுத்தித் திட்டமிடுதல் ஒரு முக்கியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும். முதலில், உங்கள் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைத்து அதனைப் பதிவு செய்து வைப்பது வாரிசுகளுக்கிடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

உங்கள் வங்கி கணக்குகள், எல்.ஐ.சி பாலிசிகள், மருத்துவம், கார் ஆகியவற்றுக்கான பாலிசிகள், நிதி திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், பிற சிறு சேமிப்புத் திட்டங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்கு எல்லாம் தனித்தனி கோப்புறைகள் வைத்து பராமரிக்க வேண்டும்.

இந்தக் கோப்புறைகளில், இவற்றின் துவக்கம், முதிர்வுக் காலம், முதிர்வு தொகை, மாதாந்திர கட்டணங்கள், செலுத்தும் தேதிகள் மற்றும் பிற அனைத்துத் தகவல்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நிதியும் சிரமும் :


நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும். அவற்றிலிருந்து சிரமமின்றி மீண்டுவர மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தோருக்கும் பேருதவியாக இருக்கும்.
  எல்.ஐ.சி மூலம் நிதி திட்டமிடுதலில் 18ஆண்டு காலமாய் உங்கள் நம்பிக்கையான


  கி.தாமோதரன்.
M.Com,.LLB.,HDCM.                             +91 9940857995

Comments

Popular posts from this blog

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்? தோழர்களே, நம்மில் பலரும் உழைத்து ஈட்டிய வருமானத்திற்கு TDS என்ற வகையில் அரசுக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற (ரீஃபண்ட்) காத்திருக்கிறோம்.  வருமான வரித் துறையோ (Income Tax Department) இந்த ஆண்டு 7.5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. ஆனால், இந்திய மக்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய பணம் ஏன் தாமதமாகிறது?  இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்: ரீஃபண்ட் தாமதமாவதற்கு என்ன காரணம்? இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகர் தாமோதரன் கி  தெளிவாக எடுத்துரைக்கிறார்.  அதன் சாரம் இதுதான்: 1. தகவலில் உள்ள முரண்கள் (Data Mismatch) :  * முக்கியக் காரணம்: நீங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள 26AS, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை), TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) போன்ற ஆவணங்களில் உள்ள தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் (Discrepancies) இருப்பதுதான் 90% தாமதங்களுக்குக் ...

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...

NPS

 NPS ( Pension is Guaranteed But Pension rate is not Guaranteed ) NPS or National Pension System is a pension scheme available for both government employees as well as private citizens. NPS is one of the most popular options available to individuals looking to create a corpus for their retirement along with a regular monthly income.The money deposited in NPS is invested in a variety of securities and investment avenues including equity market. It is widely regarded as one of the cheapest investment options with exposure to equity.As the returns are directly related to the market performance, there is no guarantee of any particular amount, but over a period of time, returns from NPS are one of the highest in the market. The two types of NPS Accounts you should know of There are two types of accounts in NPS,  NPS Tier 1 And NPS Tier 2. Tier 1 Account : This has a fixed lock-in period until the subscriber reaches the age of 60 years. Only partial withdrawal is allowed, with certa...