Skip to main content

குடும்பச் சொத்து ..... சட்டம் சொல்வது என்ன?

குடும்பச் சொத்து சட்டம்:

”தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச்சொத்து உடன்படிக்கைபத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப் படாத பட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப் பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.

தான பத்திரம்

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.ஆனால், தானபத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ப‌த்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.

உயில் (இது விருப்ப ஆவணம்)

சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெண்களுக்கான சொத்துரிமை

பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்குமுன்பு திருமணம்செய்து கொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு     திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.
வாரிசுச் சான்றிதழ்

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”பொதுவாக, சொத்து பாகப் பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்...

Comments

Popular posts from this blog

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்? தோழர்களே, நம்மில் பலரும் உழைத்து ஈட்டிய வருமானத்திற்கு TDS என்ற வகையில் அரசுக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற (ரீஃபண்ட்) காத்திருக்கிறோம்.  வருமான வரித் துறையோ (Income Tax Department) இந்த ஆண்டு 7.5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. ஆனால், இந்திய மக்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய பணம் ஏன் தாமதமாகிறது?  இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்: ரீஃபண்ட் தாமதமாவதற்கு என்ன காரணம்? இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகர் தாமோதரன் கி  தெளிவாக எடுத்துரைக்கிறார்.  அதன் சாரம் இதுதான்: 1. தகவலில் உள்ள முரண்கள் (Data Mismatch) :  * முக்கியக் காரணம்: நீங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள 26AS, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை), TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) போன்ற ஆவணங்களில் உள்ள தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் (Discrepancies) இருப்பதுதான் 90% தாமதங்களுக்குக் ...

What will happen tomorrow?

In the world of today, we seek an answer to the question, " What will happen tomorrow? " and so we contemplate the future. Especially, retirement, that period after our working years, presents itself as a formidable challenge, vast as an ocean. Our duty today is to consider whether we need a boat or a ship to cross that ocean. Physical assets like houses, land, and gold might have been symbols of pride in a bygone era. However, when we look at the issues they face today, we must realize that they can even turn into a burden.  My dear Friends! Do you know how many complications arise when you have to live off the money from selling a property or receiving income  after retirement, or even while selling it? 👉🏽. The Colossal Form of the Succession Dispute : In a family, the word 'property' has the danger of becoming a dagger that severs the bonds of affection. If family members object, saying, " _This is our ancestor's property, do not sell it,_ ...

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...