Skip to main content

முருங்கையும் ஃபிடல் காஸ்ட்ரோவோம்...

அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். 'கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!' என்று அறிவித்தார் என்று கியூபாவின் அதிகாரப் பூர்வ தரவுகள் சொல்கின்றன.

முருங்கையில் அத்தனை நோய் எதிர்ப்பு சத்து இருப்பதே அவரது அந்த செயல்பாடுகளுக்கு காரணம். 

உடல் சூட்டைத் தணிக்கிறது, உடலுக்கு வலு சேர்க்கிறது, முடி உதிர்வை தடுக்கிறது, ரத்த சோகையை நீக்குகிறது (இரும்பு!), சுவாசக்கோளாறு சளி பிரச்சினைகள் நீங்கும், ஆஸ்த்துமா, மலட்டுத்தன்மை நீங்கும் என என்னென்னவோ சொல்லும் பெரிய பட்டியல் ஒன்று உள்ளது முருங்கைக்கீரைக்கு.   நோய் எதிர்ப்பு சத்து கூட்டும் என்பதே போதுமே முருங்கையை நாம் ஏன் உண்ண வேண்டும் என்று சொல்ல. 

'பரமன்... எங்க பரமன், முருங்கைய கீரையா கடைஞ்சா பசங்க தொடக்கூட மாட்டேங்கறாங்க. கீரையை பெரட்டி தாளிச்சு வச்சா, பெரிசுங்க தொட மாட்டேங்கறாங்க. தெனமும் முருங்கைக் கீரையை சூப்பாகவா செய்ய முடியும்?' என்பவர்களுக்கு: 

ஆமாம், முருங்கை சூப் அதிக நலம் தரும் உணவுதான். ஆனால் தினமும் அதையே செய்ய முடியாதே, ஆனால், முருங்கை உணவில் வேண்டுமே என்பவர்களுக்கான எளிய முருங்கை உணவு இதோ:

ஒரு கட்டு முருங்கைக்கீரையை பிரித்து, கீரையை உருவி ஆய்ந்து எடுத்து கழுவிக் கொள்ளவும். முறத்திலோ பாத்திரத்திலோ இட்டு நிழலில் சில நாட்கள் காய விடவும். 
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் மிளகு, ஜீரகம், கடலைப் பருப்பு, பூண்டு, கொஞ்சம் பெருங்காயம் (கறிவேப்பிலை வேண்டுவோர் ஒன்றிரண்டு போட்டுக் கொள்ளலாம்), வரமிளகாய், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக இட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். (தூக்கலான சுவை வேண்டுவோர் சிறிதளவு புளியையும் சேர்த்து வறுக்கவும்).

உலர்த்தி வைத்திருந்த முருங்கை இலைகளை வாணலியில் இட்டு வறுக்கவும். ஆற வைத்து இரண்டையும் மிக்ஸியில் இட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து அடித்து எடுத்தால் ஊட்டச்சத்துள்ள 'முருங்கை பொடி' தயார். 

சுடச் சுட சோற்றில் ஒன்றரைத் தேக்கரண்டி முருங்கைப் பொடியை இட்டு, நல்லெண்ணெய்யோ நெய்யோ விட்டு (சிலருக்கு கொஞ்சம் உப்பும் சேர்க்க வேண்டி வரலாம்), பிசைந்து ஒன்றிரண்டு உருண்டைகள் உண்டாலும் கூட அன்றைய பங்குக்கான ஊட்டச்சத்து வந்து விடுமே. ஓரிரெண்டு உருண்டைகள்தான் என்றால் உங்கள் குழந்தைகளும் 'ம்ம்ம்.. ஓக்கே!' என்பார்களே! செய்யுங்கள், 

(Receipe courtesy - பானுமதி ஸ்ரீராமுலு.  
உண்டு ருசித்தது - பரமன் பச்சைமுத்து) 

உண்ணுங்கள், உறுதி கூட்டுங்கள்.

நன்றி- பரமன் பச்சைமுத்து (முகநூலில் இருந்து)
சென்னை
09.06.2021

#Moringa
#MoringaForHealth
#MoringaPowder
#MurungaiPodi
#Food
#FoodForHealth

Comments

Popular posts from this blog

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்? தோழர்களே, நம்மில் பலரும் உழைத்து ஈட்டிய வருமானத்திற்கு TDS என்ற வகையில் அரசுக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற (ரீஃபண்ட்) காத்திருக்கிறோம்.  வருமான வரித் துறையோ (Income Tax Department) இந்த ஆண்டு 7.5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. ஆனால், இந்திய மக்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய பணம் ஏன் தாமதமாகிறது?  இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்: ரீஃபண்ட் தாமதமாவதற்கு என்ன காரணம்? இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகர் தாமோதரன் கி  தெளிவாக எடுத்துரைக்கிறார்.  அதன் சாரம் இதுதான்: 1. தகவலில் உள்ள முரண்கள் (Data Mismatch) :  * முக்கியக் காரணம்: நீங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள 26AS, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை), TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) போன்ற ஆவணங்களில் உள்ள தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் (Discrepancies) இருப்பதுதான் 90% தாமதங்களுக்குக் ...

What will happen tomorrow?

In the world of today, we seek an answer to the question, " What will happen tomorrow? " and so we contemplate the future. Especially, retirement, that period after our working years, presents itself as a formidable challenge, vast as an ocean. Our duty today is to consider whether we need a boat or a ship to cross that ocean. Physical assets like houses, land, and gold might have been symbols of pride in a bygone era. However, when we look at the issues they face today, we must realize that they can even turn into a burden.  My dear Friends! Do you know how many complications arise when you have to live off the money from selling a property or receiving income  after retirement, or even while selling it? 👉🏽. The Colossal Form of the Succession Dispute : In a family, the word 'property' has the danger of becoming a dagger that severs the bonds of affection. If family members object, saying, " _This is our ancestor's property, do not sell it,_ ...

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...