Skip to main content

ரூபாயின் வரலாறு



ஒவ்வொரு நாளும் நாம் செலவிடும் ரூபாயின் (Rupee) வரலாறு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ரூபாய்க்கு சுமார் 2200 ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு சிறப்புகள் கொண்ட நம் இந்தியக் குடியரசின் நாணய முறையான (Currency of the Republic of India) ரூபாயைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோமா? .

ரூபாய் இந்தியக் குடியரசின் நாணய முறை என்பது உங்களுக்குத் தெரியும். உலகில் நன்கு மதிக்கப்படும் நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று எனலாம். இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.பி.ஐ சட்டம் 1934 (RBI Act 1934.) வழங்கும் அதிகாரத்தின்படி இந்திய ரூபாய நாணயத்தை (Indian Rupee Currency) வெளியிட்டுக் கண்காணிக்கிறது.. இந்திய சூர் வம்சத்து மன்னன் ஷெர் ஷா சூரி காலத்திலிருந்து இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் ஊடாக தற்போதைய இந்தியக் குடியரசு வரையிலான ரூபாயின் வரலாற்றை இந்தப் பதிவு விவரிக்கிறது.

ரூபாய்: பெயர்க்காரணம்

ரூபாய் என்ற சொல் எப்படி வந்தது? ரூபா (Sanskrit: रूप) என்றால் தோற்றம் அல்லது வடிவம் அல்லது உருவம்என்று பொருள். “ரூப்யா” (Sanskrit: रूप्य) என்றால் நன்கு வடிவமைக்கப்பட்ட வெள்ளி (Wrought Silver) என்று பொருள்.


காகித பணம் (ஃபியட் பணம்)
 என்பது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நாணயம், 
இது தங்கம்/வெள்ளி போன்ற ஒரு உலோகத்தால் 
ஆனதள்ள. 
ஃபியட் பணம் மத்திய வங்கிகளுக்கு(ரிசர்வ் வங்கி)
 பொருளாதாரத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக்
 கொடுக்கிறது, 
ஏனெனில் எவ்வளவு பணம் அச்சிடப்படுகிறது 
என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். 
இந்திய ரூபாய் (₹) போன்ற பெரும்பாலான
 நவீன காகிதபணங்கள்/நாணயங்கள் 
ஃபியட் பணமே

1260 – தயாரிக்கப்பட்டுள்ள உலோகத்தின்(தங்கம், வெள்ளி) மதிப்பால் அன்றி, வெளியிடும் அரசு நிர்ணயிக்கிற மதிப்பைக் கொண்டிருக்கும் உறுதிமொழி நாணயங்கள் (ஃபியட் கரன்சி, உதாரணமாக காகிதப் பணம்!) என்பவற்றை உலகில் முதன்முதலாக வெளியிட்டவரான குப்லாய் கான், மங்கோலியப் பேரரசராகப் பதவியேற்றார். ஜெங்கிஸ் கான் பல்வேறு மங்கோலியப் பழங்குடியினங்களை ஒருங்கிணைத்து, 1206இல் மங்கோலியப் பேரரசை உருவாக்கினார். உலக வரலாற்றில், தொடர்ச்சியான நிலப்பரப்பைக்கொண்ட மிகப்பெரிய பேரரசான இது, அவர் பேரனான குப்லாய் கானின் ஆட்சிக் காலத்தில், பசிஃபிக் கடலிலிருந்து கருங்கடல் வரையும், சைபீரியாவிலிருந்து ஆஃப்கானிஸ்த்தான் வரையும் பரவியிருந்தது. தொடர்ச்சியாக சுமார் இரண்டரைக் கோடி ச.கி.மீ. பரப்புக்குப் பரவியிருந்த இந்தப் பேரரசைவிட, உலகம் முழுவதும் குடியேற்றங்களைக்கொண்டு, தொடர்ச்சியற்ற மூன்றரைக்கோடி ச.கி.மீ. பரப்பைக்கொண்டிருந்த ஆங்கிலேயப் பேரரசு மட்டுமே பெரியது. குப்லாய் கான் பதவியேற்றபோது, ஜெங்கிஸ் கானின் வாரிசுகளால் நான்காகப் பிரிக்கப்பட்டாலும், அனைத்திற்குமான பேரரரசராக அவர் ஏற்கப்பட்டார். சீனா முழுவதையும் கைப்பற்றி, ஒருங்கிணைத்து ஆட்சி செய்த முதல் (ஹான்)சீனரல்லாத அரசர் குப்லாய்தான். இவரால் தோற்றுவிக்கப்பட்டதே சீனாவின் யுவான் அரச மரபு. அதற்காக அவர் டாடு(அல்லது கான்பாலிக்) என்ற பெயரில் நிர்மாணித்த தலைநகரம்தான் தற்போதைய பீஜிங். அந்த இடத்தில் ஏற்கெனவே ஒரு நகரமிருந்து, ஜெங்கிஸ் கான் படையெடுப்பின்போது 1213இல் அழிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெரிய நாடு என்பதால், தங்கம் போன்ற பொருட்களாக ஓரிடத்தில் வசூலிக்கப்படும் வரிகளை, தலைநகரிலுள்ள அரசின் கருவூலத்திற்கு எடுத்துச்சென்று, பின்னர் நிர்வாகச் செலவுகளுக்காக மீண்டும் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்புவது சிரமமாக இருந்ததால், 1227இலேயே மங்கோலியப் பேரரசு காகிதப் பணத்தை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனாலும், அது தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கு மாற்றத்தக்கதாக இருந்ததால், உண்மையான மதிப்பு தங்கம், வெள்ளிக்கே இருந்தது.  அந்நிலையை குப்லாய் கான் மாற்றியதால், அவரே உலகின் முதல் ஃபியட் கரன்சியை அறிமுகப்படுத்தியவராக ஏற்கப்படுகிறார். அனைத்துச் சமயங்களைப் பின்பற்றுவதையும் அனுமதித்த குப்லாய், அறிவியல், கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததார். வணிகத்துக்கு ஊக்கமளித்து, சாலைகள் உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது, வணிகம் செழிக்க உதவியது. வணிக வழிகளைத் திறந்துவிட்டதால், வெளிநாட்டு வணிகமும் சிறந்ததுடன், அந்நிய உறவுகளும் பலமடைந்ததுடன், கடல் வணிகத்தின் மீதான வரிகளும் அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளித்தன. வருவாய்க்காக, உப்பு உற்பத்தியில் அரசு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்திய ரூபாய் வரலாறு காலவரிசை

1938 ஜனவரி முதன் முதலாக ரூ. 5 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவத்தைப் பெற்றிருந்தது..

 

1938 பிப்ரவரி முதல் ஜூன் வரை ரூ. 10/-, ரூ. 1000/-, ரூ. 10000/- நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. 5,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் 1954 முதல் 1978 ஆம் ஆண்டு வரையில் புழக்கத்தில் இருந்தன.

1938: ரூ. 2/- நோட்டும் எட்டு அணா நாணயமும் திரும்பப் பெறப்பட்டன.

1943 ஆகஸ்டு ரூ. 2/- நோட்டு திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டது.

1950 சுதந்திரத்திற்குப் பிறகு 1 பைசா, அரை அணா, ஒரு அணா, இரண்டு அணா, கால் ரூபாய் அல்லது 4 அணா, அரை ரூபாய் அல்லது எட்டு அணா நாணயங்கள் வெளியிடப்பட்ட்டன.

1953 ரூபாய் புதிய நோட்டில் இந்தி மொழி பிரதானமாகக் காட்டப்பட்டது. இந்தி மொழியில் ரூபாய்கள் ரூப்யே (Rupye) என்று பன்மையில் குறிப்பிடப்பட்டது.

1954 ரூபாய் நோட்டுகள் ரூ. 1000/- ரூ. 5000/- ரூ. 10000/- மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டன.

1957 ஒரு ரூபாய் டெசிமல் முறைப்படி 100 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு ஒரு ரூபாய் என்பது 16 அணாக்களாகவும் 64 பைசாக்களாகவும் (காலணா) பிரிக்கப்பட்டிருந்தன.

1957 – 1967 ஒரு நயா பைசா, இரண்டு நயா பைசா, மூன்று நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா நாணயங்கள் அலுமினியத்தில் வெளியிடப்பட்டடன.

1967 ஆம் ஆண்டு இந்த அலுமினியம் நாணயங்களின் அளவுகள் குறைக்கப்பட்டன.

1980 அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த சின்னங்கள் புதிய நோட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. எ.கா.ரூ. 2/- நோட்டில் ஆர்யபட்டா கோளின் படம்; ரூ. 2/- நோட்டில் எண்ணெய் கிணறு படம்; ரூ. 5/- நோட்டில் பண்ணை இயந்திரமயமாக்கல் படம்; ரூ. 10/- நோட்டில் இந்திய கலை வடிவம் படம் (கோனார்க் சக்கரம்); ரூ. 2/- நோட்டில் இந்திய கலை வடிவம் (மயில்) படம்.

1987 அக்டோபர் புதிய ரூ. 500/- நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1988 புதிய 10, 25, 50 பைசா நாணயங்கள் எஃகு (Stainless Steel) உலோகத்தில் வெளியிடப்பட்டன.

1992 புதிய 1 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் எஃகு (Stainless Steel) உலோகத்தில் வெளியிடப்பட்டன.

1995 ரூ. 1/-, , ரூ. 2/- நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

1996 புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு அசோக ஸ்தூபி படத்துடன் வெளியிடப்பட்டு வந்தன. புதிய நீரோட்டக் குறியீடு, சாளரத்துடன் கூடிய பாதுகாப்பு நூல், (Windowed Security Thread), மறைந்திருக்கும் படம் (Latent Image), பார்வையற்றோருக்காக புடைப்பு வரிக்கோட்டுடன் படம் ஆகியவை இந்த நோட்டுகளில் இடம்பெற்றன.

2005 – 2008 புதிய 50 பைசா, ரூ. 1/-, , ரூ. 5/- நாணயங்கள் எஃகு உலோகத்தில் வெளியிடப்பட்டன.

2009 – ரூபாய்க்கான குறி எழுத்தை “₹” இந்திய அரசு மார்ச் 5, 2009 ஆம் தேதி அறிவித்தது. ரூபாயின் குறியீட்டைத் கணனியில் தட்டச்சு செய்ய, நீங்கள் ‘Ctrl + Shift + press’ ஐ அழுத்த வேண்டும்.

2010 ரூபாய் குறியீடான (sign: ₹; code: INR) சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 50 பைசாவிற்குக் கீழே புழக்கத்தில் இருந்த 25 பைசா நாணயம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

2012 ரூபாய் குறியீடாக (sign: ₹; code: INR) சின்னம் ரூ.10. ரூ.20. ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகளில் பொறிக்கப்பட்டன.

2016 நவம்பர் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பண மதிப்புகளில் புதிய நோட்டுகள் வெளியடப்பட்டன. வங்கிகள் பழைய நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கின. இது போலவே 12 ஆகஸ்டு 1946 ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000, மற்றும் ரூ. 10000 நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார்கள். 1954 ஆம் ஆண்டு இந்த நோட்டுகள் மறுபடியும் அறிமுகப் படுத்தப்பட்டன. 16 ஆகஸ்டு 1978 ஆம் தேதி அன்று ரூ.100/- க்கு மேற்பட்ட பண மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன.


Fiat money is a government-issued currency
 that is not backed by a commodity
 such as gold. 
Fiat money gives central banks(RBI) 
greater control over the economy
 because they can control how much
 money is printed. Most modern paper
 currencies,
 such as the Indian Rupees (₹) are 
fiat currencies.



நன்றி 
இந்நாள்... இதற்கு முன்னால்... மே 5
-அறிவுக்கடல்

Comments

Popular posts from this blog

What will happen tomorrow?

In the world of today, we seek an answer to the question, " What will happen tomorrow? " and so we contemplate the future. Especially, retirement, that period after our working years, presents itself as a formidable challenge, vast as an ocean. Our duty today is to consider whether we need a boat or a ship to cross that ocean. Physical assets like houses, land, and gold might have been symbols of pride in a bygone era. However, when we look at the issues they face today, we must realize that they can even turn into a burden.  My dear Friends! Do you know how many complications arise when you have to live off the money from selling a property or receiving income  after retirement, or even while selling it? 👉🏽. The Colossal Form of the Succession Dispute : In a family, the word 'property' has the danger of becoming a dagger that severs the bonds of affection. If family members object, saying, " _This is our ancestor's property, do not sell it,_ ...

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...

Income Tax Deductions List FY 2019-20

Income Tax Deductions List FY 2019-20 |  Tax Exemptions for AY 2020-21 Tax Planning is part of the financial plan. Whether you are a salaried individual, a professional or a businessman, you can save taxes to certain extent through proper tax planning. The Indian Income Tax act allows for certain Tax Deductions / Tax Exemptions which can be claimed to save tax. You can subtract tax deductions from your Gross Income and your taxable income gets reduced to that extent. In this post, let us go through the  Income Tax Deductions List FY 2019-20, best ways to save taxes and best tax saving options for FY 219-20 / AY 2020-21 . I hope you find this list useful and helps in planning your taxes well in advance. Income Tax Deductions List FY 2019-20 / AY 2020-21  (Chapter VI-A deductions list) Income Tax Deductions List | IT Exemptions List | FY 2019-20 / AY 2020-21 Section 80c The maximum tax exemption limit under Section 80C has been retained as Rs 1.5 Lakh only. The various inve...