Skip to main content

பெண்களின் சொத்துரிமைச் சட்டத்தின் (MWP ACT 1874.) கீழ் வாரிசுதாரர்

Life Insurance & Married Women’s Property Act (MWP Act) – Details & Benefits


பெண்களின் சொத்துரிமைச் சட்டம் MWP ACT 1874.


பெண்களின் சொத்துக்களை கணவர் உட்பட அனைத்து உறவினர்களிடமிருந்தும் காப்பதே இதன் நோக்கம்.
இச்சட்டப்பிரிவு 6 இன்சூரன்ஸ் பாலிசிகள் பற்றியது.
இப்பிரிவின்கீழ் LIC பாலிசி எடுத்தால் பாலிசி பலன்களை கடன்தாரர்களோ நீதிமன்றமோ வருமானவரியோ அட்டாச்மென்ட் செய்யமுடியாது. நாமினிதாரராக நியமிக்கப்பட்டவர்களே உரிமத்தொகையை பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள்.


       
MWP சட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் பாலிசி வாங்கமுடியும்?
இச்சட்டத்தின் கீழ் திருமணமான எல்லா ஆண்களும் LIC பாலிசியை வாங்க இயலும். மணமுறிவு பெற்றவர்கள் மனைவியை இழந்தவர்கள்கூட இச்சட்டத்தின் கீழ் பாலிசி வாங்க இயலும்.தனிநபர்களின்மீது மட்டுமே பாலிசி எடுக்க இயலும்.மூன்றாம் நபர்கள் மீதான முன்மொழிவுகள், joint life proposal ஆகியவற்றை இச்சட்டத்தின் கீழ் முன்மொழிய இயலாது.
ஜிவன் அக்சை, ஆரோக்கியா  தவிர்த்து ஏனைய பாலிசிகளை இச்சட்டத்தின் கீழ் முன் மொழியலாம்.


திருமணமான மகளிரும் இச்சட்டத்தின் கீழ் பாலிசி எடுக்க இயலும். குழைந்தைகளை பயனாளராக நியமிக்கலாம். 
கணவர் எந்த உரிமையும் கோர இயலாது. திருமணமான மகளிர் இச்சட்டத்தின் கீழ் பாலிசி பெற்றிருந்தால் அது அவளுடைய தனி சொத்தாக கருதப்படும்.

MWP சட்டத்தின் கீழ் பாலிசி எப்படி பெறுவது?
பாலிசியை முன்மொழியும்போதே MWP க்கான படிவத்தில் பாலிசி பயனாளிகளின் விவரத்தை  நிரப்பி தந்தாலே போதுமானது. Trustee யை விருப்பப்பட்டால் நியமிக்கலாம். காப்புத் தொகை பனாளிகளுக்கு எந்தெந்த விகிதத்தில் வழங்கவேண்டும் என்பதைக்கூட தெரியப்படுத்தலாம். கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை.
ஏற்கனவே வாங்கிய பாலிசிகளில் MWP சட்டத்தின்கீழ் பயனாளிகளை நியமிக்க இயலாது. பதிய முன்மொழிவின்போது மட்டுமே MWP சட்டத்தின் கீழ் பயனாளிகளை நியமிக்க இயலும்.

யாரையெல்லாம் பயனாளிகளாக நியமிக்கலாம்

🔴மனைவி மட்டும்

🔴குழைந்தைகளை மட்டும்(சட்டபடி சத்தெடுத்தக் குழைந்தை உட்பட)

🔴மனைவி மற்றும் குழைந்தைகள் சேர்த்தோ தனியாகவோ நியமிக்கலாம்.


 நியமிக்கப்பட்ட பயனாளிகளையும் காப்பாளர்களையும் (trustees) இடையில் மாற்றமுடியுமா?

நியமிக்கப்பட்ட பயனாளிகளை எப்போதும் மாற்ற இயலாது.

ஆனால் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் பாலிசதாரர்(life Assuredவிரும்பினால் எப்போது வேண்டுமானாலும் மாற்றலம்.

MWP சட்டத்தின் கீழ் பாலிசி எடுக்கும்போது தானகவே ஓர் அறங்காவல்(trust) உருவாகிறது.

இருந்த போதும் பாலிசிதாரர் விரும்பினால் காப்பாளரை தனியாக நியமிக்க இயலும்.

காப்பாளர் பெயரை குறிப்பிடலாம்.

பயனாளி மைனாராக இருக்கும்பட்சத்தில் கட்டாயம் காப்பாளரை(trustee)  நியமிக்க வேண்டும்.


நியமிக்கப்படும் காப்பாளர் மேஜராக இருக்க வேண்டும்.

 HUF (Hindu Undivided Family) இருக்கக்கூடாது.

பாலிசிதாரரே காப்பாளராகவோ பயனாளராகவோ இருக்க முடியாது.

ஆனால்

பயனாளரே காப்பாளராக இருக்கலாம்.

மூன்றாம் நபரை காப்பாளராக நியமிக்கலாம்.

பாலிசியின் பணப்பயன்{உரிமம் (மெட்யூரிட்டி லோன் உட்பட)} பயனாளிகளுக்காக காப்பாளர் பெறமுடியும்.


MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசியின் மீது கடன் வாங்கவோ அசைன்மென்ட் செய்யவோ முடியுமா?

MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசியின் மீது கடன் வாங்கவோ அசைன்மென்ட் செய்யவோ முடியாது.

ஆனால் பயனாளிகளின் தேவைக்காக கடன் பெற,பயனாளிகள் (காப்பளர் இருப்பின்  காப்பாளரும்) பாலிசிதாரர் சேர்ந்து வின்னப்பிக்கவேண்டும்.  பாலிசியின் தன்மைக்கேற்ப பாலிசிக் கடன் கிடைக்கலாம்


MWP சட்டத்தின் கீழ் வாங்கிய எல்ஐசி பாலிசிகளை சரண்டர் செய்ய முடியுமா?


MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசியினை சரண்டர் செய்ய இயலும்.

ஆனால் பயனாளிகள்(மேஜர் மட்டும்) (காப்பளர் இருப்பின்  காப்பாளரும்) பாலிசிதாரர் சேர்ந்து சரண்டருக்கு வின்னப்பிக்க வேண்டும். பாலிசியின் தன்மைக்கேற்ப பாலிசியின் சரண்டர் தொகை கிடைக்கலாம்

பாலிசிதாரர் எந்த பணப்பயனையும் பெறமுடியாது


MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசி களின் முதிர்வுத்தொகை, எல்லா உரிமத்தொகை, வாழ்வுகால பயன்,கடன் சரண்டர் ஆகிய அனைத்து தொகைகளும் பயனாளிகளின்(காப்பாளர் இருப்பின் காப்பாளரின்) வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும்

மேலும் விவரங்களுக்கு

கி தாமோதரன் M.Com.,LLB.,HDCM

                    Financial Planner

                    +91 7358210672

Comments

Popular posts from this blog

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்? தோழர்களே, நம்மில் பலரும் உழைத்து ஈட்டிய வருமானத்திற்கு TDS என்ற வகையில் அரசுக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற (ரீஃபண்ட்) காத்திருக்கிறோம்.  வருமான வரித் துறையோ (Income Tax Department) இந்த ஆண்டு 7.5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. ஆனால், இந்திய மக்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய பணம் ஏன் தாமதமாகிறது?  இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்: ரீஃபண்ட் தாமதமாவதற்கு என்ன காரணம்? இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகர் தாமோதரன் கி  தெளிவாக எடுத்துரைக்கிறார்.  அதன் சாரம் இதுதான்: 1. தகவலில் உள்ள முரண்கள் (Data Mismatch) :  * முக்கியக் காரணம்: நீங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள 26AS, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை), TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) போன்ற ஆவணங்களில் உள்ள தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் (Discrepancies) இருப்பதுதான் 90% தாமதங்களுக்குக் ...

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...

NPS

 NPS ( Pension is Guaranteed But Pension rate is not Guaranteed ) NPS or National Pension System is a pension scheme available for both government employees as well as private citizens. NPS is one of the most popular options available to individuals looking to create a corpus for their retirement along with a regular monthly income.The money deposited in NPS is invested in a variety of securities and investment avenues including equity market. It is widely regarded as one of the cheapest investment options with exposure to equity.As the returns are directly related to the market performance, there is no guarantee of any particular amount, but over a period of time, returns from NPS are one of the highest in the market. The two types of NPS Accounts you should know of There are two types of accounts in NPS,  NPS Tier 1 And NPS Tier 2. Tier 1 Account : This has a fixed lock-in period until the subscriber reaches the age of 60 years. Only partial withdrawal is allowed, with certa...